Friday 11 March 2016

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான்.
இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான்.
இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் அதுவும் தவ்ஹீத் பெயரால் உள்ளவர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றது. இவர்களை நேசிக்கமுடியுமா? இந்த 5 விஷயங்களில் பீஜே எவ்வாறெல்லாம் சந்ததேகக்தை ஏற்படுத்துகின்றார் என்பதனை அறிய இந்த வீடியோவை பார்வையிடவும்.
குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் அதில் இலக்கணப் பிழைகள் உள்ளனவா? குர்ஆன் விமர்சனம் செய்ய கூடியவரை நேசிக்க முடியுமா?
குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உள்ளனவா? ஸஹாபாக்கள் கவனகுறைவாக எழுதும்போது பிழையாக எழுதினார்களா?
தஜ்வீத் குறியீடுகள் – குர்ஆனில் சேர்க்கப்பட்ட எழுத்துக்களா?
கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் நிராகரித்தலுக்கும் பீஜே நிராகரிப்புக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
விஞ்ஞானம் அறிவியில் உண்மைக்கு மாற்றமாக ஹதீஸ்கள் உள்ளனவா? சூரியன் மறையும் ஹதீஸ் அறிவியல் உண்மைக்கு மாற்றமானதா?
கண்ணுறு (கண்ணேறு) ஹதீஸை மறுக்க சினிமா நடிகைதான் ஆதாராமா?
மலக்குமார்கள் பற்றிய நம்பிக்கை (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துல்! – மனிதப் படைப்பு சம்மந்தமாக அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்களா?
மலக்குமார்கள் அனைவரும் ஷைத்தானுடன் சேர்ந்துகொண்டு இறைவனுக்கு மாறுசெய்தார்களா?
தாவூத் (அலை) அவர்கள் பொதுமக்கள் சொத்தை அபகரித்தாரா? (தர்ஜுமா 15-வது வெளியீட்டில் என்னவாக மாற்றப்பட்டுள்ளது)
நபி (ஸல்) அவர்கள் நபி ஆன பிறகு குறிப்பிட்ட காலம் சிறிய இணைவைப்பில் இருந்தார்களா?
நபிமார்கள் பற்றிய நம்பிக்கை (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துல்!
அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையில் (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துதல்! (அர்ஷில் மீதுள்ளான் என்ற செய்தியை வைத்து)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கவாரிஜ்கள் மத்தியில் கூறிய வார்த்தை பீஜே-ஜமாத்திற்கு எப்படி பொறுந்தியுள்ளது!
ஸஹாபாக்களுக்குள்ள மார்க்க அங்கீகாரம் பீஜேவிற்கும் தத-ஜமாத்திற்க்கும் உண்டா?
நபிமார்கள் பற்றி நம்பிக்கையை உமர் (ரழி) அறியாமல் இருந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் நேர்வழிபெற்ற கலிபாக்களின் ஆட்சியை விமர்சனம் செய்யலாமா?
உஸ்மான் (ரழி) மாமன் மச்சான்-மார்களுக்கு பதவி கொடுத்தார்களா? உண்மைநிலை என்ன?
கவாரிஜ்கள் உஸ்மான் (ரழி) மீது வைத்த குற்றசாட்க்கும் பீஜே உஸ்மான் (ரழி) மீது வைக்கும் குற்றசாட்டுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் உள்ள அவரது பொருளாதார நிலையும் பதவிக்கு வந்தபின் உள்ள பொருளதார நிலை என்ன?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் எத்தனை ஒட்டகம் வைத்திருந்தார்கள் பதவிக்கு வந்தபின் இருந்த ஓட்டகம் எத்தனை?
உஸ்மான் (ரழி) உறவினர்களுக்கு அரசு சொத்தை தானமாக கொடுத்தாரா? தனது சொந்த சொத்தை கொடுத்தாரா?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் மிக பெரிய செல்வந்தர் பதவிக்கு வந்தபின் எப்படியிருந்தார்?
இப்படி விமர்சனம் செய்யும் பீஜே-யின் பொருளாதார நிலை என்ன?
அல்லாஹ்-வின் தூதர் சிலாகித்த ஸஹாபாக்களை கேவலப்படுத்த கூடியவர்களை நேசிக்கலாமா?
அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) நரகம் போவார்கள் என நம்புவர்களை நேசிக்கலாமா?
ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM) வழங்கும் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு
இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் – பறகஹதெனிய
நாள்: 06-02-2016
தலைப்பு: தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்
S. H. M. இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர், உண்மை உதயம்)
பேராசிரியர், தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்
வீடியோ: JASM Media

No comments:

Post a Comment